திருவள்ளூர்5 வது புத்தகத் திருவிழா தொடக்கம்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 5 வது புத்தகத் திருவிழா தொடக்கம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 13.02.2026 முதல் 22.02.2026 வரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) 5 வது புத்தக திருவிழா காலை 10 மணி முதல் இரவு 9 வரை நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் 60 அரங்குகளில் அனைத்து வகையான புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளது. மேலும் மாலை 4 மணி முதல் 6  மணி வரை மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது, அதனை தொடர்ந்து 6 மணி முதல் 9 மணி வரை மக்களின் மனங்கவர்ந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
13.02.2026 வெள்ளி (இன்று) தேவகோட்டை அபிராமி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து  “அகழ்வாய்வுகளின் மூலம் வெளிப்படும் தமிழர் தொன்மை“ என்ற தலைப்பில்  பேச்சாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார்.14.02.2026 சனி அன்று  ‘மகிழ்வூட்டி வழிகாட்டுவது திரை இசையா? இலக்கியமா?“ என்ற தலைப்பில் கலைமாமணி திண்டுக்கல் ஐ,லியோனி பட்டிமன்றம்  நடைபெற உள்ளது.
15.02.2026 ஞாயிறு அன்று சூப்பர் சிங்கர் சீசன் 11 நிக்கில், திஷாதனா, ஆபிரகாம் நித்திய பாண்டியன். தர்ஷணா மற்றும் வாத்தியக்குழுவினர் “இன்னிசை நிகழ்ச்சி“16.02.2026 திங்கள் அன்று புதிய உலகம் – புதிய பார்வை“ என்ற தலைப்பில் கோபிநாத் விஜய்டிவி  நிகழ்ச்சி நெறியாளர் ” மற்றும் “மனக்கோட்டம் தீர்க்கும் நூல்“ என்ற தலைப்பில்  கபிலா விசாலாட்சி பட்டிமன்ற பேச்சாளர் ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
17.02.2026 செவ்வாய் அன்று “திரியின்றி எரியும் தீபங்கள்” என்ற தலைப்பில் ஈரோடு மகேஷ் விஜய்டிவி  நிகழ்ச்சி தொகுப்பாளர், “சிரித்த வாழ வேண்டும்“ என்ற தலைப்பில் அறந்தாங்கி நிஷா ஆகியோர் பேச உள்ளனர்.18.02.2026 புதன் அன்று “வாழ்வில் வெற்றி பெற பெரிதும் தேவை அதிர்ஷ்டமா? உழைப்பா? என்ற தலைப்பில் ராஜா அவர்களின் பட்டிமன்றம் நடைபெறும்.19.02.2026 வியாழன் அன்று “மாபெரும் சபைதனில்“ என்ற மதுரை உலக தமிழ்ச் சங்க துணை தலைவரும் இயக்குநருமான இ.சா.பர்வீன் சுல்தானா,“அகத்தின் அழகு“ என்ற தலைப்பில் திரைப்பாடலாசிரியர் கவிஞர்.யுகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
20.02.2026 வெள்ளி அன்று “புத்தகம் ஒரு வெடிகுண்டு“ என்ற தலைப்பில் முத்துகுமரன், “புத்தகமும் புன்னகையும்“ என்ற தலைப்பில் மதுரை முத்து உரையாற்ற உள்ளனர்.21.02.2026 சனி அன்று  திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். “தமிழ் ஓசை – பழந்தமிழ் இலக்கிய பாடல்கள் இன்றைய இசை, 22.02.2026 ஞாயிறு அன்று சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர் கவிஞர்.மனுஷ்ய புத்திரன்  “வாசிப்பும் சமூக நீதியும்“ என்ற தலைப்பில் பேச உள்ளார்.
இப்புத்தக திருவிழாவில் வாங்கும் புத்தகங்களுக்கு 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. புத்தக திருவிழாவை பார்வையிட நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. பொதுமக்கள் அனைவரும் 13.02.2026 முதல் 22.02.2026 வரை நடைபெற உள்ள 5வது புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்து, புத்தங்களை வாங்கி பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares