திருவள்ளூரில் 2-வது நாளாக போராட்டம்
![]()
திருவள்ளூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் பிப் 13 : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, மருத்துவவிடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரமைகளை வழங்க வேண்டும், நிரந்தப் பணியாளராக அறிவிக்க வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும்.காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 7 ஆண்டுகள் பணி முடித்துள்ள பணி மேற்பார்வையாளர்கள் அனைவரையும் இளநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்திட வேண்டும், 1500 ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறை தேர்வுகளை பழைய முறையிலேயே தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய நடைமுறையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கும் வகையில் தெளிவுரை மற்றும் பின்னேற்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுத்தி தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காணாத பட்சத்தில் உயர்மட்டக் குழு கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

