மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Loading

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் சாலை மறியல் :
திருவள்ளூர் பிப் 12 : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தூயம்மைப் பணியாளர்களுக்கு  முறையாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும் சம்பள உயர்வு வழங்க கோரியும் மருத்துவமனையில் பணியாற்றும் 100- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவமனை பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.  திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இருந்த மருத்துவமனை சுமார் 200 கோடி மதிப்பீட்டில் 1500 படுக்கை வசதிகளுடன் கூடிய 5 மாடிகளுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு தற்பொழுது செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லும் நிலையில் கட்டிட அளவிற்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை எனவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையும் நிலவு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  இந்நிலையில் மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் குறைவான சம்பளம் வழங்கப்படுவதாகவும் அந்த சம்பளத்தை உரிய நேரத்தில் தர வேண்டும் என்ற கோரிக்கை அடிக்கடி எழுந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து 10-ஆம் தேதி ஆகியும் இதுவரை மருத்துவமனை நிர்வாகம் இதுவரை சம்பளம் வழங்கவில்லை எனவும் சம்பளம் வழங்கப்படாதது குறித்து கேட்டால் நீங்கள் சரியாக வேலை செய்யவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து மருத்துவமனை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலையது.  உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவமனை பணியாளர்கள் திடீரென சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர் தி.அரீஷ்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், மருத்துவமனை பணியாளர்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்ததால் மருத்துவமனையின் முதல்வர் சம்பளம் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.  இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
0Shares