FAIRAமண்டலபொறுப்பாளர்கள்&உறுப்பினர்கள்ஆலோசனை
![]()
FAIRAமண்டல பொறுப்பாளர்கள்&உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று 10.02.2026 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் தஞ்சை மாநகரம் சவுத் ரோட்டரி கிளப்பில்FAIRA கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு.எஸ்.பாலாஜி அவர்களின் தலைமையிலும், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.V.J.பெலிக்ஸ் சுந்தர் அவர்களின் வரவேற்புரையிலும், தேசிய நிர்வாகச் செயலாளர் திரு.T.கிருஷ்ணகுமார் – இணைச் செயலாளர் திரு.J.கார்மேகம் ஆகியோர்களின் முன்னிலையிலும் திரு. P. யூஜின் ராஜ் அவர்களின் நன்றியுரையிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில குழு பொறுப்பாளர்கள் திரு.சம்பத், திரு.ராகவன், திரு.பாஸ்கரன் திரு.சசிகுமார் திரு.சுரேஷ் திரு.ராஜேஷ் கண்ணா திரு.சிவகுமார், திரு.ராமச்சந்திரன் ஆகியோர்களும் மாவட்ட குழு பொறுப்பாளர்கள் திருமதி.பச்சையம்மாள் திரு.வெங்கடேசன் திரு. சிவபாலன் திரு.சுந்தர் ஆகியோர்களும்
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுனர்கள் – மனை அபிவிருத்தியாளர்கள் – ஆர்கிடெக்ட் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் உள்ளூர் திட்ட குழுமத்தின் வரைவினை விரைந்து முடித்து நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும்,
பதிவுத்துறையில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகளை களைய வேண்டும் எனவும்,
பதிவுத்துறை ஆன்லைன் 3.0 திட்டத்தை வலிமைப்படுத்தி எளிமைப்படுத்தி பாதுகாப்பு நடைமுறைகளை பலப்படுத்திட வேண்டும் எனவும்,
நஞ்சை நிலங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தடையின்மை சான்றினை விரைந்து வழங்க வேண்டும் எனவும்,
புதிய மனை பிரிவுகளுக்கு தஞ்சை மாநகராட்சி இறுதி ஒப்புதல் வழங்காமல் கடந்த எட்டு மாத காலமாக நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும்
தானியங்கி முறையில் தாமாக பட்டா மாறுதல் திட்டத்தை தமிழ் நிலம் மென்பொருள் மூலம் பட்டா மாறும் வகையில் உறுதிப்படுத்திட வேண்டும் எனவும்,
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

