பொதுத்தேர்தலைமுன்னிட்டுமுன்னெச்சரிக்கைநடவடிக்கை
![]()
திருவள்ளூரில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் :
திருவள்ளூர் பிப் 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 னை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள எல்லை மாநிலமான ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை, பொருட்கள்,மதுவகைகள், போதைவஸ்துகள் எடுத்து வருவதை தடுப்பதற்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சிவருமான மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, பொன்னேரி சார் ஆட்சியர் ரவிகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

