புழல் பகுதியில் காணாமல் போனவர் புட்லூர் பகுதியில் செப்டிக் டேங்கில் பிணமாக மீட்பு : இரண்டு பேரை கைது செய்து விசாரணை :
திருவள்ளூர் பிப் 10 : சென்னை புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் மகேந்திரன் (28 ) இவர் தென்காசி மாவட்டம் , கடையநல்லூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் வாய் பேசாமலும் ,செவிகள் கேட்காமலும் இருந்து வந்த நிலையில் சென்னை, பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலைப்பார்த்து வந்து புழலில் காந்தி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் . தென்காசியில் உள்ள தனது வீட்டிற்கு அடிக்கடி செல்போனில் வீடியோ கால் மூலம் சைகையில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மகேந்திரன் வீடியோ காலில் குடும்பத்தினருடன் பேசாசாததன் காரணமாக சந்தேகமடைந்த அவருடைய மாமா மகன் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புழல் காவல் நிலையத்தில் காணவில்லை என புகார் அளித்தார் .
இது குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்து உள்ளார். இதுபற்றி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் மற்றும் புழல் சரக காவல் உதவி கமிஷனர் சிபுகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸ் படை அமைக்கப்பட்டுபுழல் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் செல்போனை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர். இரண்டு மாதமாக இறந்தவரின் செல்போன் அணைக்கப்பட்டு கடந்த இரு நாட்களுக்கு முன்பு செல்போன் இயங்கியதால் போலீசார் துரித விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
மகேந்திரனுடன் சென்னையில் துணிக்கடையில் பணிபுரிந்த அவருடைய நண்பர்கள் லாரன்ஸ் ( 45) வைத்தியநாதன் ( 45) ஆகிய இருவரும் வாய் காது கேட்காத நிலையில் மூவரும் அவ்வப்போது சந்தித்து பேசுவது வழக்கம். இதில் லாரனஸ்ஸ் என்பவரது மனைவி வசந்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியது. இதனை அறிந்த லாரன்ஸ் மகேந்திரனை தீர்த்துக்கட்ட திருவள்ளுர் மாவட்டம் புட்லூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடைய நண்பர் வைத்தியநாதனும் சேர்ந்து மதுஅருந்தி பின்னர் மகேந்திரனை அடித்து சித்திரவதை செய்து மர்ம உறுப்பில் எட்டி உதைத்து கொலை செய்து உடலை வீட்டின் அருகே உள்ள பாதாள கழிவுநீர் தொட்டியில் வீசி மூடிவிட்டு ஒன்றும் தெரியாது போல் இருந்து விட்டனர்.
சடலம் இருப்பதை அறிந்த புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் செவ்வாய்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த பாதாள சாக்கடையில் செவ்வாப்பேட்டை தீயணைப்பு துறையினருடன் சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட லாரன்ஸ் மற்றும் வைத்தியநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
காணாமல் போன நபர் இரண்டு மாதத்தில் பிணமாக போலீசார் மீட்ட சம்பவத்தால் அப்பகுதிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் துரிதமாக செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசாரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.