255 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா சா.மு.நாசர் வழங்கினார்

Loading

பொன்னேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 255 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 09 : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 255 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகள் மேலாக குடியிருந்து வரும் நபர்களுக்கு வரன்முறைப்படுத்தி பட்டா வழங்க ஆணையிட்டதன் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 01 லட்சம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சரால் “உங்க கனவை சொல்லுங்க” என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு பின்னால் உள்ள முக்கிய நோக்கம் கடைநிலை பொது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் குறிப்பாக அவர்களது உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிப்பதாகும்.
இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஏலியம்பேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் காலம் காலமாக வசித்து வரும் இடத்திற்கு பட்டா இல்லை எனவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் கீழ் நோக்கி செல்வதாகவும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், பொன்னேரி வட்டம், ஏலியம்பேடு கிராமத்தை சேர்ந்த 49 நபர்கள் மற்றும் 22 கிராமங்களை சேர்ந்த 206 நபர்களுக்கு ஆக மொத்தம் 255 நபர்களுக்கு இன்று வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது என அமைச்சர் கூறினார்.
இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர்,பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிகுமார்,பொன்னேரி நகர் மன்றத் தலைவர் பரிமளா விஸ்வநாதன், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares