மத்தியப்பிரதேசமுதல்வர் மோகன்யாதவ் விஐடிவருகை
![]()
மத்தியப்பிரதேச முதல்வர் மோகன்யாதவ், விஐடி போபால் பல்கலைக்கழகத்திற்கு வருகை
போபால்: மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ், விஐடி போபால் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார்.அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் போபால் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்கிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவர்களை, விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதுகுறித்து, விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதன் கூறும்போது, “மத்தியப்பிரதேச மாநில முதல்வரின் பயணமானது விஐடி போபால் பல்கலைக்கழகத்திற்கும், மாநில அரசுக்கும் உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.மேலும், மத்திய அரசு பிரதிநிதிகளுடனான தொடர்புகளையும்எடுத்துக்காட்டு வதாக அமைந்துள்ளது.
மேலும் உயர்கல்வியை வலுப்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்துதல் ஆகிய பொதுவான இலக்குகளில் விஐடி போபால் பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுவதை பிரதிபலிக்கிறது”என்றார்.
இதனிடையே, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்களையும், விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் சந்தித்து பேசினார்.

