கல்லூரி மாணவரை தாக்கி நகை பறிப்பு
![]()
கல்லூரி மாணவரை தாக்கி நகை பறிப்பு – பா.ஜ.க பிரமுகர் உட்பட இருவர் கைது !!!*

நகை வியாபாரம் செய்யலாம் என அழைத்துச் சென்று கல்லூரி மாணவரை தாக்கி நகை பறித்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம் பெட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், இவருடைய மகன் அபினேஷ். இவர் கோவை அருகே உள்ள ஒரு கல்லூரியில் இன்ஜினியரிங் 4 ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் போடிநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சர்வேஷ், தேனியை சேர்ந்த கரண் ராஜ், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பாலாஜி ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் மூன்று பேரும் அபினேஷிடம் பகுதி நேர வேலையாக தங்க வியாபாரம் செய்யலாம் என்றும் கூறி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து அபினேஷிடம் தங்களுக்கு தெரிந்த நபர் ஒருவர் தங்கத்தை பாதி விலைக்கு கொடுப்பதாக கூறி உள்ளனர். அதை வாங்கி நாம் கூடுதல் விலைக்கு விற்கலாம் என்று கூறி எட்டிமடை அருகே வருமாறு அழைத்து உள்ளனர்.
அதை நம்பிய அபினேஷும் எட்டிமடை அருகே சென்றார். அப்பொழுது ஒரு காரில் சர்வேஷ், கரண்ராஜ், பாலாஜி உட்பட ஐந்து பேர் வந்தனர். அவர்கள் அபினேசை மாவுத்தம்பதி அருகே காட்டுப் பகுதிக்குள் காரில் கடத்திச் சென்றனர். அங்கு சென்றதும், ஐந்து பேர் சேர்ந்து திடீரென அபினேஷ் சாரா மாறியாக தாக்கி இரண்டு பவுன் செயின், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் கந்தே கவுண்டன் சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதை அடுத்து தேனியில் பதுங்கி இருந்த சர்வேச போலீஸ் பிடித்து கோவைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பெயரில் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த கார் வியாபாரியும், பா.ஜ.க பிரமுகரமான விவேக் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சர்வேஷ், விவேக் உட்பட ஆறு பேர் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து காவல் துறையினர் விவேக் உட்பட இரண்டு பேரையும் கைது செய்து இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர்.

