மூவர்ணதேசியக் கொடியை 4000 மாணவர்கள் கையில் ஏந்திபேரணி

Loading

திருவள்ளூரில் உலக அமைதிக்காக கன்னியாகுமரி முதல் சியாட்சி வரை உள்ள தூரமான 3964 கி.மீ.நீளத்தை உணர்த்தும் வகையில் மூவர்ண தேசியக் கொடியை 4000 மாணவர்கள் கையில் ஏந்தியவாறு பேரணி சர்வதேச உலக சாதனை :

திருவள்ளூர் பிப் 07 : திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் அமைந்துள்ள தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மீனம்பாக்கம் அரிமா சங்கம் சார்பில் 77,ஆவது குடியரசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அரிமா சங்கம் பாலாஜி அனைவரையும் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து தேசியக் கொடியை அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது தேசிய பெருமையும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு பேரணியாகும். இதில்‌ 4000 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, கன்னியாகுமரி முதல் சியாட்சி வரை 3964‌ கி.மீட்டர் தூரத்தை உணர்த்தும் வகையில் பிரம்மாண்டமான மூவர்ண தேசிய கொடியை  கையில்  ஏந்தியவாறு உலக அமைதி வேண்டி பேரணியாகச் சென்றனர்.
 இது சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீனம்பாக்கம் அரிமா சங்கம், உறுப்பினர்கள் பாலாஜி, பிரவீன் தெல்லகுலா, ஆர்,பாலாஜி குப்தா, லட்சுமி நாராயண குப்தா, மற்றும் டி,ஆர்,பி சிசிசி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜி,ராம்மோகன், மற்றும் (சி,சி,சி,) பள்ளி தலைமை ஆசிரியர் ராஜநாராயணன், உட்பட பள்ளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
0Shares