வெளிமாவட்டநெல்விற்பனைசெய்வதுதெரிந்தால்நடவடிக்கை
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் கொள்முதல் 2025-2026 சம்பா பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் 13 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் ஆக மொத்தம் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லினை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து 02.02.2026 வரையில் 8,425 மெ.டன் நெல்லினை 978 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இதுவரையில் ரூ.16 கோடி தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் காலி கோணிகள் 9,10,000 எண்ணிக்கைகள் மற்றும் நெல் கொள்முதலுக்கு தேவையான அனைத்து தளவாடப் பொருட்களும் கையிருப்பில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். வியாபாரிகளோ அல்லது பிற மாவட்ட / மாநில நெல்லோ கொள்முதல் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது மற்றும் தொடர்புடைய நெல் விற்பனையாளர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

