கோயில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

Loading

புதுச்சேரி பிப்-5
புதுச்சேரி உப்பளம் எல்லையம்மன் கோயில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அனிபால் கென்னடி எம்எல்ஏ
புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லை அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோயில் தளம் அமைத்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், கோவில் கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுமார் 5,500 சதுர அடியில் அமைக்கப்பட்டு வரும் இந்த கோவில் கட்டுமானப் பணிகள் தற்போது 50 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோவில் அதிகாரி காமராஜ் அவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
மேலும், கோவில் கட்டுமான பணிகள் தரமாகவும், காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0Shares