சமூகபாதுகாப்புத்திட்டத்தின்முதியோர்உதவித்தொகை

Loading

 

தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  4.2.2026 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்வில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்  சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  து. ரவிக்குமார் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் முனைவர் க. பொன்முடி, கே.எஸ். மஸ்தான்,  இலட்சுமணன் அந்நியூர் சிவா  மணிகண்ணன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பொன். கௌதமசிகாமணி, முதல்வரின் முகவரித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி பெ.அமுதா சமூக பாதுகாப்புத் திட்டத்தின் ஆணையர் கிரண் குராலா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்  ஜெ. மேகநாத ரெட்டி  விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares