உங்களுடன்ஸ்டாலின் திட்டம் பயனாளிகளுக்குஉதவி
![]()
திருவள்ளூர் மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கு அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்:
திருவள்ளூர் பிப் 04 : தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10000 முகாம்கள் நடத்தப்பட்டு 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பயன்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியினை திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சி ஒண்டிகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டு, பின் 10,630 பயனாளிகளுக்கு ரூ.2,67,88,540 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” முகாம்கள் வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல், மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேர்தல் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை மாற்றுத்திறனாளிகள் நலன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, இதர
துறைகள், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம்
மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சிறுபான்மையினர் நலன் என மொத்தம் 48986
மனுக்கள் பெறப்பட்டது.
துறைகள், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம்
மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சிறுபான்மையினர் நலன் என மொத்தம் 48986
மனுக்கள் பெறப்பட்டது.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம், ஆதரவற்ற விதவை உதவித்தொகை திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதிய உதவித் தொகை திட்டம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதிய திட்டம், முதிர்கன்னி உதவித்தொகை திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட ஓய்வூதிய உதவித் தொகை என மொத்தம் 10030 பயனாளிகளும், வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம் மற்றும் இதர சான்றுகள் என மொத்தம் 450 பயனாளிகளும் இதர துறை மனுக்கள் 150 பயனாளிகளும் ஆக மொத்தம் 10600 பயனாளிகளுக்கு ரூ. 2,67,88,540 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.1,01,800 மதிப்பீல் 68 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை ஆக
மொத்தம் ரூ.69,22,400 மதிப்பீட்டில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் வழங்கினார்கள்.
மொத்தம் ரூ.69,22,400 மதிப்பீட்டில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), துரைசந்திரசேகர் (பொன்னேரி), டி.ஜே.கோவிந்தராஜ்
(கும்மிடிப்பூண்டி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.