எண்ணெயை இருவர் மீது ஊற்றிய குற்றவாளி கைது

Loading

வேலூர்
திருவலம் சிக்கன் கடையில் ஜிபே பிரச்சினையால்
எண்ணெயை இருவர் மீது ஊற்றிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவ லம் இ.பி கூட்ரோடு பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான சர வணன். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி மாலை 7.00 மணிக்கு கடையில் இருந்த பொழுது வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்த அரவிந்த், அவரது தந்தை தேவேந்திரன், ஆகியோர் அந்த கடைக்கு சென்று உள்ளனர் சிக்கன் ரைஸ் மற்றும் சிக்கன் 65 ஆகியவை சாப்பிட்டு அதற்கு உண்டான பணத்தை ஜிபே மூலம் செலுத்தியுள்ளனர். ஜிபே வேலை செய் யாத காரணத்தினால் கடையின் உரிமையாளர் சரவணனுக்கும் அக்கடையில் வேலை செய்யும் குபேந்திரன் சாதிக் பாஷாவும் தந்தை மற்றும் மகனி டம் வாக்குவாதம்  செய்துள்ளனர்.வாக்குவாதம் முற்றிய நிலையில் குபேந்திரன், மற்றும் சாதிக் பாஷா ஆகி யோர் அருகில் இருந்த கொதிக்கும் எண்ணெயை தூக்கி தந்தை மகன் மீது ஊற்றியுள்ளனர். இதனை அடுத்து தேவேந்திரன் அரவிந்தன் மற்றும் உடன் இருந்த பலராமன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச் சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தேவேந் திரன் அளித்த புகாரின் பேரில் திருவலம் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, வழக்கு பதிவு செய்து சரவணன், குபேந்திரன் மற்றும் சாதிக் பாஷா, ஆகிய மூவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இதில் கைது செய்யப்பட்ட சரவணன் என்பவர் மீது திருவலம் காவல் நிலைய மற்றும் சுற்று வட்டார காவல் நிலையங்களில் நான்கு கொலை வழக்குகள், கொலைமுயற்சி வழக்கு, ஆள் கடத்தல் வழக்கு, வழிப் பறி வழக்கு, திருட்டு வழக்கு, கஞ்சா வழக் கென 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பரிந்துரையின், பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து அந்த உத்தரவு நகலினை திருவலம் போலீசார் வேலூர் மத்திய சிறையில் உள்ள சரவணனிடம் ஒப்படைத்தனர்.
0Shares