இயற்கை உபாதைகழிக்கும் சக்கர நாற்காலி1.44 லட்சம்

Loading

திருவள்ளூரில் 12 பல்வேறு குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.44 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை உபாதை கழிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 387 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 78 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 45 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 22 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி32 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 210  மனுக்கள் என ஆக மொத்தம் 387 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12 பல்வேறு குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12000 வீதம் ஆக மொத்தம் ரூ.1.44 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை உபாதை கழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், துணை ஆட்சியர் (பயிற்சி) செ.சண்முகபிரீத்தா, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares