தென்னிந்திய பஞ்சாலை சங்கம் சைமா பாராட்டு

Loading

கோவை
ஜவுளித் துறையின் வளரச்சியை ஊக்குவிக்கும் மத்திய பட்ஜெட் கோவை பந்தயசாலையில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா அமைப்பு  பாராட்டு தெரிவித்துள்ளது. 
கோவை பந்தயசாலையில் உள்ள, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க அலுவலகம் அமைந்துள்ளது இங்கு, இச்சங்கத்தின் தலைவர் துரை பழனிச்சாமி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பட்ஜெட் நிதிநிலை அறிக்கையை வெகுவாக பாராட்டி உள்ளார் மேலும் இது குறித்து அவர் கூறியதாவது..
இந்திய ஜவுளித்தொழில், விவசாயத்திற்கு அடுத்தப்படியாக வேலைவாய்ப்பை குறிப்பாக கிராமப்புற மக்களுக்கும் அதிகப்படியான பெண்களுக்கும் வழங்கி வருகின்றதாகவும், சுமார் 10.5 கோடிபேருக்கு ஜவுளித்தொழில் வேலைவாய்ப்பை வழங்கிவருகிறது என்றார். மேலும் தேசிய பஞ்சு, செயற்கை இழை மற்றும் இதர புதிய மூலப் பொருள்கள் தேவையான அளவிற்கு உலக விலையில் கிடைக்க வழிவகுக்கும் என்று  நம்பிக்கை தெரிவித்துள்ளார். பருத்தி உற்பத்தி மேம்பாட்டிற்கு சென்ற நிதி ஆண்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்து அமல்படுத்தப்பட்டு வருகின்றதாகவும், பல்வேறு வரியில்லா ஒப்பந்தங்களினால் ஜவுளி தொழில் வளர்ந்து வரும் நிலையில் தரமான மூலப்பொருள்கள் உலக விலையில் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டியது அவசியம் என்று  கூறியதுடன்,
அனைத்து வகை பருத்திகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள 11சதவிகித  இறக்குமதி வரியை நீக்கி, அரசாங்கம் நிர்ணயித்துள்ள தொலைநோக்கு இலக்கை தொழில்துறை அடைய வழிவகை செய்யுமாறு  பாரத பிரதமரை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் கடற்கரை சரக்கு போக்குவரத்து திட்டம், உற்பத்தி துறைக்காக 10,000 கோடி நிதி ஒதுக்கீடு, அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிப்பு, உருவெடுக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான திட்டங்கள் ஆகியவை, ஜவுளி துறையின் உலகளாவிய போட்டிகளை உயர்த்த உதவும் என்றும் தெரிவித்தார். குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம், விவசாயிகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அதிக விலை சர்வதேச பருத்திவலையை விட சுமார் 20% அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
0Shares