குன்னூர்சிம்ஸ்பூங்காவில் மலர்செடிநடவு செய்யும்பணி
![]()
குன்னூர்
குன்னூர் சிம்பூங்காவில் கோடைப்பருவத்தையொட்டி மலர்செடிகள் நடவு செய்யும் பணி மணியளவில் தோட்டக்கலை இணை இயக்குநர்
ஷிபிலாமேரி, உதகை அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக சால்வியா மற்றும் டேலியா செடிகள் சிம்ஸ்பூங்காவில் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் மலர் நாற்றுக்கள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சால்வியா, ஆன்ட்ரினம். பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு. பேன்சி, பிளாக்ஸ், டெல்பினியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா,லேடிலேஸ். காஸ்மஸ், வின்கா, காம்பிரினா, ஸ்டேட்டிஸ், லிஸியான்தஸ், ஜினியா, ஸ்வீட், வில்லியம், செலோசியா. ப்ரிமுளா, கிளியோம், ஆஸ்டர், லூபின், கேன்டிடஃப்ட் இம்பேசியனஸ். ஹெலிகிரிசம், டேலியா ஆகிய மலர் செடிகளும் மேலும் சிம்பூங்காவில் ஜிப்சோபிலா, ரெனன்குலஸ், கிளியான்தஸ், கால்சியோலேரியா, கோடெசியா, குளோக்சினியா, அஸ்டிபிள் போன்ற புது ரக நாற்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. இவ்வருட கோடைப்பருவத்தையொட்டி அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட 50- க்கும் மேற்பட்ட மலர்செடி வகைகள் மற்றும் 125-க்கும் மேற்பட்ட ரக நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதில் குன்னூர் சிம்ஸ்பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குநர் விஜயலட்சுமி சிம்ஸ்பூங்கா மேலாளார் லஷ்மணன் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்

