உதகை வட்டார போக்குவரத்துதுறை ழிப்பபுணர்வு பேரணி

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில், வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு  நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்தான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு மாதம் 01.01.2026 முதல் 31.01.2026 வரை கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, வட்டாரப்போக்குவரத்துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக இன்று உதகை மத்திய பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணியானது, மணிக்கூண்டு, காபிஹவுஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை வழியாக சேரிங்கிராஸ் பகுதியில் நிறைவடைந்தது. இப்பேரணியில், ஜெ.எஸ்.எஸ் பள்ளியைச் சேர்ந்த 200 மாணவ, மாணவியர்கள், 100 அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகன ஓட்டுநர்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்டோர், “தூங்கும் கண்கள் துயரின் கணங்கள் – ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டு பிற உயிர் காப்பீர் அதிவேகமே விபத்துக்கு காரணம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, மகளிர் காத்திருப்பு அறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இப்பேரணியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  என்.எஸ்.நிஷா , வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், போக்குவரத்து ஆய்வாளர் குணசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ரவி, போக்குவரத்துத்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares