தேயிலை உற்பத்தியாளர் கூட்டமைப்பு (பிட்மா) மாநாடு

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (பிட்மா) முதலாவது தேசிய மாநாடு  நடைபெற்றது.
அஸ்ஸாம்,  வங்காளம் மற்றும் நீலகிரி பகுதிகளை சார்ந்த தேயிலை உற்பத்தியாளர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அதை  எதிர்கொள்ள தேவைப்படும்  செயல் திட்டங்கள் குறித்து கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. 600 மில்லியன் கிலோவிற்கு மேல் தேயிலை உற்பத்தி செய்து நாட்டின் மொத்த தேயிலை 50%-மாக,உள்ள நிலையில் இதை இன்னும் அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
மற்றும் கூட்டமைப்பை வலுப்படுத்துவது , தேயிலை தரம்  மேம்படுத்துவது உள்ளிட்ட  பல்வேறு பிரச்சனைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
மேலும் தேயிலை ஆரோக்கிய பானம் என்பதை பிரபலப்படுத்தி தற்போதுள்ள 860 கிராம்,தனி நபர் தேயிலை உபயோகத்தை 1000 கிராமாக உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் தேயிலை உற்பத்தியாளர்கள், உற்பத்தியாளர்களின்,தலைவர் தேவன்சிங், துணைத் தலைவர்கள், சஞ்சய் தானேத்தி, தனஜெயன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் செயலாளர் விகாஸ், மந்தானியா,மேலும் இந்த மாநாட்டில் அசாம்,வடக்கு வங்காளம், தமிழ்நாடு,கேரளா, அருணாச்சல பிரதேஷ் உட்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த தேயிலை உற்பத்தியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்
0Shares