44.55 கோடியில்கட்டப்பட்ட தரமற்றரயில்வே மேம்பாலம்
![]()
திருவள்ளூர் அருகே ₹44.55 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் தரமற்ற முறையில் கோணல் கோணலாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று இருந்தது ட்ரோன் காட்சியில் பதிவாகியதால் மக்களிடையே அதிர்ச்சி :
திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில்வே கடவு பாதை எல்.சி.14 மேம்பாலம் ₹ 44.55 கோடியில் 14 ஆண்டு காலமாக கட்டப்பட்டு வந்த நிலையில் அதனை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ. வேலு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறந்து வைத்தனர்.
ரூ.44.55 கோடி மதிப்பீட்டில் 14 ஆண்டுகளாக கட்டப்பட்ட பாலம் கோணலும் மானலுமாய் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு பாம்பு போல வளைத்து நெளித்து ஒருவழியாக யாருக்கு வந்த விருந்தோ என கட்டி அவசரகதியில் திறந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் பொறியாளர்கள் முறையாக இதை கண்காணித்தார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அந்த அளவிற்கு பாலத்தின் அமைப்பு இருந்தது. இதனை ட்ரோன் காட்சிகள் பகிரங்கமாக காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.இதில் சிறப்பாக செயல்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சான்றிதழ் விருது வழங்கி வேறு கௌரவித்துள்ளார்.
30- 40 ஆண்டுகள் தாங்க வேண்டிய இந்தப் பாலம் அதிகாரிகளின் உரிய கண்காணிப்பு இன்றி கோணல் மாணலாக கட்டப்பட்டுள்ளது இவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கட்டும் தங்களது வீடுகளை இப்படித்தான் கட்டுவார்களா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

