ஜே கே நண்பர்களின் 19ம் ஆண்டு குடியரசு தின விளையாட்டு விழா

Loading

அப்பநாயக்கன்பாளையத்தில் ஜே கே நண்பர்களின் 
19ம் ஆண்டு குடியரசு தின விளையாட்டு விழா 
பி ஆர் ஜி அருண்குமார் எம் எல் ஏ பரிசுகளை வழங்கினார்.
கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் ஜே கே நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து 19ம் ஆண்டு குடியரசு தின விளையாட்டு விழா நடத்தினர். இந்நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் ஜே கே நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ஆண்டு தோறும் குடியரசு தினவிழா விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.அதேபோல் இந்த ஆண்டு 19ம் ஆண்டு குடியரசு தின விளையாட்டு விழா ஜல்லிக்காடு பகுதியில் நடத்தினர். முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது.தொடர்ந்து குழந்தைகளுக்கான 50 மீட்டர், 100 மீட்டர், 250 மீட்டர் ஓட்ட போட்டிகளும், பக்கெட் பால், பலூன் உடைத்தல், பிஸ்கட் கடித்தல் போன்ற வேடிக்கை விளையாட்டுகளும் நடைபெற்றது.
தொடர்ந்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கான மெதுவாக பைக் ஓட்டுதல், மூன்று கால் ஓட்டம், லெமன் ஸ்பூன், பாட்டிலில் தண்ணிர் நிரப்புதல், குண்டு எறிதல் மற்றும் 1500 மீட்டர் ஓட்ட போட்டிகள் நடைபெற்றது.மாலை குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி, நடனப் போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை முதல் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.அதேபோல் 1 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஜே கே நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ரமேஷ்குமார்,  செல்வகுமார், சரவணன், அடைக்கலராஜ், நாகராஜ், கார்த்தி, ரமேஷ், சுரேஷ், வச்சிகுமார், ஐபெல், சரவணகுமார், தினேஷ், வெங்கடேஷ், அருண், ராஜ்குமார், ராஜு மற்றும் முன்னாள் கவுன்சிலர் கவிச்சந்திரமோகன், சாந்திபூசன், சண்முகம், ரங்கநாயகி, முத்து, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0Shares