மைய தடுப்புகளில் மின் கம்பங்கள்அமைக்கும் பணி

Loading

நெமிலிச்சேரி-நடுகுத்தகை ஊராட்சிகளில் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் சி.டி.எச் சாலையின் மைய தடுப்புகளில் மின் கம்பங்கள் அமைத்து தெரு மின் விளக்குகள் அமைக்கும் பணி : அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சி பேருந்து நிறுத்தம் அருகில் ஊராட்சி பொது நிதி மற்றும் பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிதி (சிஇஆர்) நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நெமிலிச்சேரி-நடுகுத்தகை ஊராட்சிகளில் சி.டி.எச் சாலையின் மைய தடுப்புகளில் மின் கம்பங்கள் அமைத்து தெருமின் விளக்குகள் அமைக்கும் பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் துவக்கி வைத்தார்.
நெமிலிச்சேரி ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.21 இலட்சமும், நடுகுத்தகை ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.26 இலட்சமும், திருநின்றவூர் நகராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சமும், பெரு நிறுவன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிதி (சிஇஆர்) நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.50 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.123.50 இலட்சம் மதிப்பீட்டில் 146 கம்பங்களும், 292 மின் விளக்குகளும் அமைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், திருமணம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பிம்ஜென்மன் திட்டத்தில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளையும், பாரிவாக்கம் ஊராட்சியில்   ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.78.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டட கட்டுமான பணிகளையும், காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.92.99 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சாலை பணிகளையும், செம்பரபாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பிம்ஜென்மன்  திட்டத்தில் ரூ.81.44 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், திருநின்றவூர் நகர்மன்ற தலைவர் உஷாராணிரவி, திருநின்றவூர் நகராட்சி ஆணையர் ராமர், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்பாபு, அமிழ்தமன்னன், ஆவடி வட்டாட்சியர் கண்ணன் உதவி செயற்பொறியாளர் மாரிசெல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares