பார்க் கல்வி நிறுவனங்களில் பிரம்மாண்ட உலக சாதனை

Loading

கோவையில்
பார்க் கல்வி நிறுவனங்களில் பிரம்மாண்ட உலக சாதனை, மின்னணு கழிவுகளை கூகுள் சீட்டில் வகைப்படுத்தி மாணவர்கள் அசத்தல்.
கோயம்புத்தூர் கருமத்தம்பட்டியிலுள்ள பார்க் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிரீன் எரா இணைந்து நடத்திய மின்னணு கழிவுகளை (E-Waste) அடையாளம் கண்டு வகைப்படுத்தும் உலக சாதனை முயற்சி  ம நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று,மின்னணு கழிவுகளை அவற்றின் தன்மைக்கேற்ப மறுபயன்பாடு, மறுசுழற்சி, அபாயகரமானவை மற்றும் நிலப்பரப்புக் கழிவுகள் என நான்கு பிரிவுகளாகத் தரம் பிரித்து புதிய உலக சாதனை படைத்தனர்.இதற்காக ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் முறையான சரிபார்ப்புப் பட்டியல்கள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் துல்லியமாக வகைப்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டது.மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன், கருமத்தம்பட்டி வளாகத்திலுள்ள பிரேமா ரவி அரங்கில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியை ‘வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன்’ அமைப்பின் நடுவர்கள் நேரில் ஆய்வு செய்து அந்த அமைப்பைச் சேர்ந்த ரெக்கார்ட் மேனேஜர் கிறிஸ்டோபர் கிராப்ட் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.இதுகுறித்து பேசிய அனுஷா ரவி சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், மின்னணு கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, கல்வி நிறுவன வரலாற்றில்   மைல்கல்லாக அமைந்தது என தெரிவித்தார்.
0Shares