தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசு
![]()
திருவள்ளூரில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜன 29 : கடந்த 2021 இல் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத அரசை கண்டித்து பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
அப்பொழுது தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அரசு கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தங்களது கோரிக்கைகளான 70 வயது முடிவடைந்தவர்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்திற்காக பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அங்கன்வாடி சத்துணவு மற்றும் வருவாய் கிராம ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் காசு இல்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் இல்லையென்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர்.

