காணாமல் போன மகன் சேற்றில் சடலமாக மீட்பு
![]()
திருவள்ளூர் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மகன் சேற்றில் சடலமாக மீட்பு :
திருவள்ளூர் ஜன 29 : திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் கௌரி சங்கர் (29). பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது நண்பர்களுடன் நேற்று மீன்பிடிக்க அருகில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வராத நிலையில் மகன் கௌரி சங்கரின் நண்பர் அசோக் குமார் என்பவர் ஏரியில் மீன் பிடிக்கும் போது மூழ்கியதாக கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆனால் வெகுநேரம் ஆகியும் கிடைக்காத நிலையில் இரவு தேட முடியாமல் இன்று காலை தேடியபோது சேற்றில் புதையுண்டு இறந்து கிடந்த கௌரிசங்கரின் உடலை மீட்டனர். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

