அடகுகடையின்சுவற்றில்துளையிட்டுதங்கநகைதிருட்டு

Loading

திருவள்ளூர் அருகே அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு தங்க, வெள்ளி நகைகள் பணம் திருட்டு :
திருவள்ளூர் ஜன 29 : திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் புத்தாராம் (46). இவர் எறையூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
காலை 8 மணியளவில் அருகில் மளிகை கடை நடத்தி வரும் சம்சுதின் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடையின் பின்புறம் துளையிட்டு உடைக்கப்பட்டுள்ளதாக கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து பார்த்த போது கடையில் இருந்த 4 கிராம் கம்மல், 176 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசில் புத்தாராம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0Shares