பெண்கள்மேல்நிலைப்பள்ளியில்ரூ.1.21கோடியில்6வகுப்பறை

Loading

தண்டுரை அரசு மாதிரி பள்ளியில் விடுதி கட்டும் பணி மற்றும் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் : அமைச்சர் சா.மு.நாசர்  அடிக்கல் நாட்டி வைத்தார் :

திருவள்ளூர் ஜன 29 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், தண்டுரை அரசு மாதிரி பள்ளியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் விடுதி கட்டும் பணிகளுக்கும் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் அடிக்கல் நாட்டி வைத்தார்.

தண்டுரை அரசு மாதிரி பள்ளியில் பெண்கள் தங்கும் விடுதி தரைத்தளம் மற்றும் முதல் தளங்களை கொண்ட 15640 ச.அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தில்  தரை தளத்தில் வரவேற்பறை மற்றும் 4 தங்கும் அறைகள் விடுதி காப்பாளர் அறை, குளியல் அறை, கழிவு அறை வசதிகளும் முதல் தளத்தில் 4 தங்கும் அறைகள், விடுதி காப்பாளர் அறை, குளியல் அறை, கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டடம் கட்டப்படவுள்ளது. ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தரை தளத்தில் 3 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 3 வகுப்பறைகளும் என 2 தளத்திலும் கட்டிடம் கட்டப்படவுள்ளது. மேலும், தனியார் நிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ஆய்வகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், காட்டுப்பாக்கம் ஊராட்சி செந்தூர்புரம் முருகன் கோவில் தெரு பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15 இலட்சமும் மற்றும் தனியார் நிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் ரூ.35 இலட்சம் ஆக மொத்தம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பூங்கா பணிகளுக்கு அமைச்சர் சா.மு.நாசர்,மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் அடிக்கல் நாட்டி வைத்தார். இப்பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், நடைப்பாதை, சுற்றுச்சுவர், கழிவு அறை மற்றும் மரக்கன்றுகளுடன் பசுமையான பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜ் (கும்மிடிப்பூண்டி), ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆணையர் ஆவடி மாநகராட்சி ரா.சரண்யா,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சு. தணிகாசலம், உதவி செயற்பொறியாளர் மாரிசெல்வன், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்பாபு, அமிழ்தமன்னன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சொ.கற்பகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் எம்.ஐயப்பன், தனியார் கார் நிறுவன துணை பொது மேலாளர் (சி.எஸ்.ஆர்) ஹ மின் ஓ, கல்லூரி முதல்வர் கே. சுதாகர், பேராசிரியர்கள், திரளான மாணவ,மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares