மாணவர்களின் கிராம வேளாண் முன்னேற்ற பணி

Loading

திருவள்ளூர் அடுத்த அரக்கோணம் ஜெயா வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் கிராம வேளாண் முன்னேற்ற பணி :

திருவள்ளூர் ஜன 28 : திருவள்ளூர் அடுத்த அரக்கோணம் ஜெயா வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் 14 பேர், சமூக பொறுப்புணர்வுடன் இணைந்து, அரியாத்தூர், மாமந்தூர்,பூண்டி ஆகிய கிராமங்களில் சிறப்பான வேளாண் செய்முறை விளக்க நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிகள் லோகேஷ் குமார் எஸ் மற்றும் சுதீஷ் ஜே ஆகியோர் தலைமையில் மாணவர்கள் விவசாயிகளுக்காக நேரடி, பயன்பாடுள்ள விளக்கங்களை வழங்கினர். இதில் பெபிள்ஸ் மழ்சிங் – நீர் சேமிப்பு, மண் ஈரப்பத பாதுகாப்பு, வீட்டு தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து பாதுகாப்பு,வெர்மி கம்போஸ்ட் – மண் வளம் மேம்பாடு, முட்டை அமினோ அமிலம் மற்றும் மீன் அமினோ அமிலம் – இயற்கை ஊட்டச்சத்து கரைசல்கள், பூச்சி வலைகள் – சூழல் நட்பு பூச்சி கட்டுப்பாடு,3G கரைசல் – இயற்கை வேளாண் பயன்பாடுகள் போன்ற தலைப்புகளில் நேரடி செய்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.மேலும் குறைந்த செலவில் அதிக பலன் தரும் இயற்கை முறைகள் குறித்து எளிய மொழியில் விளக்கப்பட்டதால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சந்தேகங்களுக்கு உடனடி விளக்கங்களும் வழங்கப்பட்டு, நடைமுறை அறிவு உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த முயற்சி, இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுயநிறைவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அமைந்து, ஜெயா வேளாண் கல்லூரி மாணவர்களின் சமூக சேவை மனப்பாங்கையும் வெளிப்படுத்தியது. கிராமப்புற வேளாண் வளர்ச்சிக்கு இத்தகைய முன்னோடி நடவடிக்கைகள் புதிய மாற்றங்களை உருவாக்கும் என அனைவரும் பாராட்டினர்.

0Shares