பசுமைவரிதிட்டத்தின்கீழ்ரூ.65இலட்சம் மதிப்பில்பூங்கா

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பசுமை வரி திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வளம் மீட்பு பூங்கா மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீருஅவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு பர்லியார், குஞ்சப்பணை உள்ளிட்ட சோதனை சாவடிகளில் வசூலிக்கப்பட்ட பசுமை வரி நிதியிலிருந்து ரூ.65 இலட்சம் மதிப்பில் உபதலை ஊராட்சியில் வளம் மீட்பு மையத்திற்கு தேவையான அனைத்து விதமான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இம்மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் வாங்க அருங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மூலம் ரூ.20 இலட்சம் வழங்கப்படவுள்ளது. இவ்வள மீட்பு மையத்திற்கு குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள 6 கிராம ஊராட்சிகளிலிருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளை தனிதனியாக பிரித்தெடுத்து, கிளீன் குன்னூர் அமைப்பின் மூலம் சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுப்பபடவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தலைமை பொது மேலாளர் கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு விகாஷ்பூர்வார் அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌர் , அவர்கள், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், விமலா, கிளீன் குன்னூர் அமைப்பினர் சமந்தா, வசந்தன், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares