சேலம் அரசுமகளிர்கலைக்கல்லூரி மாணவிகள்சந்திப்பு
![]()
சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி – பழைய மாணவிகள் சந்திப்பு 2025-26
சேலம்.ஜன.27
சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்கான பழைய மாணவிகள் சந்திப்பு, கல்லூரி கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
OSA (Old Students Association) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1980 முதல் 2022 வரை கல்லூரியில் பயின்ற பழைய மாணவிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 530-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே மேடையில் சந்தித்து, தங்களது நினைவுகளைப் பகிர்ந்து, உறவுகளை புதுப்பித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 18 பழைய மாணவிகள், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கல்வி, அரசு சேவை, வங்கிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் ஆற்றிய சாதனைகள் பாராட்டப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அருள்மொழி (மதராஸ் உயர்நீதிமன்றம்), டாக்டர் ஷீலா டேனியல் முதல்வர் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாத்தூர்) மயில் (துணை ஆட்சியர், சேலம்) ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த டாக்டர் காந்திமதி (OSA தலைவர்), டாக்டர் விஜயகுமாரி (OSA செயலாளர்) மற்றும் OSA நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியின் முடிவில், கலாச்சார நிகழ்ச்சிகள், நினைவுப் புகைப்படங்கள், மாணவிகளின் அனுபவப் பகிர்வு ஆகியவை நடைபெற்றன. பழைய மாணவிகளுக்கும் தற்போதைய மாணவிகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது.

