சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்

Loading

 

சேலம்

சேலம் அஸ்தம்பட்டி மத்திய சிறைச்சாலை வளாகத்தில், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் தேசிய கொடியை தனது திருக்கரங்களால் இயற்றி வைத்தார். இதனையடுத்து சிறைக் கண்காணிப்பாளர் வினோத், சேலம் மத்திய சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைமையில், சிறப்பு காவல் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. விழாவில், சேலம் மத்திய சிறை ஜெயிலர் ராஜேந்திரன், துணை ஜெயிலர்கள் பிரபாகரன், சிவா மற்றும் முதல் தலைமை காவலர்கள் ராஜமாணிக்கம், வடிவேல் முருகையா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், பணியாளர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0Shares