லட்சுமி பவ்யா தண்ணீரு தேசிய கொடிஏற்றி மரியாதை

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு  அவர்கள், தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா  அவர்களின் முன்னிலையில், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு, வண்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வகையில் புறாக்களையும் பறக்க விட்டு, 26 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 20 நபர்களுக்கும், 18 மாவட்ட முதல்நிலை அலுவலர்கள், 6 மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் நேர்முக எழுத்தர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், வருவாய்த்துறை சார்பில் 22 நபர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் 17 நபர்களுக்கும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட அலுவலகம் சார்பில் 2 நபர்களுக்கும், மாவட்ட நில அளவை துறை சார்பில் 2 நபர்களுக்கும், மருத்துவ காப்பீட்டு திட்டம் சார்பில் 1 நபருக்கும், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் 2 நபர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் 6 நபர்களுக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவை சார்பில் 2 நபர்களுக்கும்,
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் 3 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 3 நபர்களுக்கும், தமிழ்நாடு வனத்துறை சார்பில் 13 நபர்களுக்கும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் 1 நபருக்கும், கருவூலக கணக்குத்துறை சார்பில் 2 நபர்களுக்கும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் 1 நபருக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 1 நபருக்கும், நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் 4 நபர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் 1 நபருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 1 நபர்களுக்கும், சமூக நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 நபர்களுக்கும், பொதுப்பணித்துறை (மின்) அலுவலகம் சார்பில் 1 நபருக்கும், பொதுப்பணித்துறை (கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை) சார்பில் 2 நபர்களுக்கும், நீலகிரி மின் பகிர்மான வட்ட அலுவலகம் சார்பில் 1 நபருக்கும்,அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1 கோடி கடன் பெறுவதற்கான ஆணையினையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10.40 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1.40 இலட்சம் மதிப்பில் நுண் தொழிற்கடனுதவிகளையும்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.5 பயனாளிகளுக்கு ரூ.26,035/- மதிப்பில் தையல் இயந்திரங்களையும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ரூ.2 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பில் வைப்பு பத்திரங்களையும், மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில் அன்புகரங்கள் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.48,000/-மும், தோட்டக்கலைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு பசுமைக் குடில் அமைக்க ரூ.10.92 இலட்சம் நிதியுதவியும், 1 பயனாளிக்கு பண்ணைக்குட்டை அமைக்க ரூ.75,000/- நிதியுதவியும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.12,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 3 பயனாளிகளுக்கு ரூ.3,000/- மதிப்பில் மருந்து பெட்டகங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.31,500/- மதிப்பில் சக்கர நாற்காலிகளையும் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பறை இசையுடன் ஒயிலாட்ட நடனத்தினையும், தூதூர்மட்டம் எம்.எம்.பி மெமோரியல் மெட்ரிக்குலேசன் பள்ளி “இளையபாரதம் எழுகவே” பாடல் நடனத்தினையும், அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பறை இசையுடன் சாகச நடனத்தினையும், ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் “எழுந்திடு தேசமே” பாடல் நடனத்தினையும், எம்.பாலாடா ஏகலவைவன் அரசு மாதிரி
உறைவிடப்பள்ளியின் “வானம் எங்கும் செல்லும் வந்தே மாதரம்” பாடல் நடனத்தினையும், உதகை அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்தின் “பட்டாம்பூச்சியல்ல நீ இரும்புப் பெண்மணி” பாடல் நடனத்தினையும், உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் “அரிசி வெளஞ்ச ஊரு எங்கப்பன் பொந்த ஊரு” பாடல் நடனத்தினையும், கேர்கம்பை “ஹில்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் “முன்னேறு தமிழா, முன்னேறு தமிழா” எனும் பாடல் நடனத்தினையும், இருளர் இன மக்களின் நடனம், அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்களின் தோடர் இன மக்களின் நடனம் மற்றும் தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் படுகர் இன மக்களின் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு, குடியரசு தினவிழா அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷாகௌர் , அவர்கள், மாவட்ட வன அலுவலர் (உதகை) கௌதம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா , உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஸ்ரீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) திருமதி லோகநாயகி, கண்ணன் (கணக்கு), சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திருநாவுகரசு, வருவாய் கோட்டாட்சியர்கள்
டினுஅரவிந்த் (உதகை), குணசேகரன் (கூடலூர்), நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சரவணன், உதகை நகர்மன்றதலைவர் வாணீஸ்வரி, உதகை வட்டாட்சியர் .சங்கர்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares