ஆதிதிராவிடர் நலத் துறைமனித நேய வாரதுவக்க விழா
![]()
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் மனித நேய வார துவக்க விழா: மாவட்ட ஆட்சியர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஜன 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் மனித நேய வார துவக்க விழாவினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் குத்துவி ளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனிதநேய வார விழா ஆண்டுதோறும் ஜனவரி திங்கள் 24 முதல் 30 வரை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது. மேலும், நமது தேசதந்தை அண்ணல் காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30ஆம் நாள் தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தீண்டாமையை அறவே ஒழித்து அனைத்து மனிதர்களும் சாதி சமய வேறுபாடுன்றி ஒற்றுமையுடனும் சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்கி நேர்மையுடனும், மனிதநேயத்தை கடைபிடிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
நாம் அனைவரும் நமது அரசியலமைப்பின்படி தீண்டாமையை கடைபிடிக்காமல், எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமை, வாக்கு செயல் மற்றும் இதர இனங்களில் தீண்டாமையை கடைபிடிக்காமல் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், ஜனவரி 24 முதல் 30 வரை 7 நாட்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ செய்தி மக்கள் தொடர்புத் துறை காவல் துறை, பள்ளி கல்வி துறை, மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகள் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நாட்டியம், நாடகம், பேச்சு, கட்டுரை ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டு ஜனவரி 30 அன்று இறுதி நாள் நடைபெறும் பெரு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இதில் தனி வட்டாட்சியர்கள் (ஆ.தி.ந) சித்ரா, செல்வம்,வெண்ணிலா, தலைமையசிரியர்கள் வெங்கடேசன் (செவ்வாப்பேட்டை அரசினர் ஆ.தி.ப), நகராஜன் (புங்கத்தூர் அரசினர் ஆ.தி.ப) பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

