திருந்தவெளிகலைஅரங்கம்MPகணபதிராஜ்குமார்திறந்துவைத்தார்

Loading

கோவை
நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
ரூ.20 லட்சத்தில் திருந்தவெளி கலை அரங்கம் 
MP கணபதி பி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள திருந்தவெளி கலை அரங்கத்தை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி பி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளி நகர் பகுதியில் நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணதி பி ராஜ்குமாரின் 2024–2025 ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பள்ளி வளாகத்தில் திருந்தவெளி கலை அரங்கம் புதிதாக அமைக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலை அரங்கத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி பி ராஜ்குமார் திறந்தவெளி கலை அரங்கை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சந்துரு ஜெகவி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் இளமுருகன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திபிரியா, துணைத் தலைவர் சின்னராஜ், எஸ் எம் சி தலைவர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, ஒன்றியச் செயலாளர் கார்த்திக், கென்னடி குரூப் செல்வநம்பி, உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் ராகுல், ஒப்பந்ததாரர் ரவி என்கிற பாலசந்திரன் உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் என பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தமிழ் ஆசிரியர் முனியான்டி தொகுத்து வழங்கினார். இறுதியாக உதவி தலைமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்,
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ப ராஜ்குமாருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும், இருபுறமும் மாணவர் நின்று கைகளை தட்டியும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
0Shares