ராமகிருஷ்ணாமகளிர்கல்லூரிபெண்குழந்தைகள்தினம்

Loading

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது..
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு அமைப்பு, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்புகளின் சார்பில் பேரணி நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் கி.சித்ரா ஆகியோர் தொடங்கி தொடங்கி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் கி.சித்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது..
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் கல்விக்காண ஒரு பிரத்தியேக கல்லூரியாக உள்ள எங்கள் கல்லூரி சார்பில் இதை முன்னிட்டு இன்றைய தினம் பெண் குழந்தைகளுக்கான சம உரிமைகள், கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய பதாகைகளை ஏந்தி எங்கள் மாணவிகள் கோஷமிட்டபடி மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர்.
என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி தன்னார்வலர்கள் உட்பட 150 மாணவிகள்  இந்த விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றனர். பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த செய்திகள் அடங்கிய பதாகைகளையும் போஸ்டர்களையும் ஏந்தி, கல்லூரி வளாகத்திலிருந்து மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை முழக்கங்களை எழுப்பியதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares