சாலைபாதுகாப்பு தலைகவச இருசக்கர வாகன பேரணி
![]()
சேலம் மாநகர காவல் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைகவச இருசக்கர வாகன பேரணி.
சேலம்.ஜன.25
சேலம் மாநகர காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், தலைகவச இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி சேலம் உடையாப்பட்டி ஹோலி கிராஸ் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை சேலம் மாநகர தெற்கு காவல் துணை ஆணையாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த இருசக்கர வாகன பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, ஹோலி கிராஸ் பள்ளியில் இருந்து சேலம் மாநகர லைன்மேடு ஆயுதப்படை கவாத்து மைதானம் வரை பேரணியாக சென்றனர்.
பேரணி முடிவில், ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி அவர்கள் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்தார். மேலும், பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்ததுடன், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்த சாலை பாதுகாப்பு வார தலைகவச இருசக்கர வாகன பேரணியில், சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகள், காவலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.S

