பேங்க் ஆஃப் பரோடா சார்பில் நம்ம சொத்து கண்காட்சி

Loading

பேங்க் ஆஃப் பரோடா சார்பில் ‘நம்ம சொத்து கண்காட்சி – 2026’

வீட்டுக் கடன் திருவிழா
சேலம்.ஜன.25
பொதுமக்களின் கனவு இல்லம் வாங்கும் முயற்சிக்கு துணை நிற்கும் வகையில், பேங்க் ஆஃப் பரோடா சார்பில் ‘நம்ம சொத்து கண்காட்சி – 2026’ என்ற பெயரில் வீட்டுக் கடன் திருவிழா நடைபெறுகிறது.
இந்த வீட்டுக் கடன் திருவிழா (ஜனவரி 24 மற்றும் 25, 2026) ஆகிய இரு நாட்கள், சேலம் பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும், பேங்க் ஆஃப் பரோடா திருச்சிராப்பள்ளி பிராந்திய மேலாளர் சாமுவேல் ஸ்டீபன் மற்றும் துணை பிராந்திய மேலாளர் கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இந்த சொத்து கண்காட்சியில், வீடு மற்றும் நிலம் வாங்க விரும்புவோருக்கு ஏற்ற வகையில் சிறப்பு சலுகைகளுடன் கூடிய வீட்டுக் கடன் திட்டங்கள், நிதி ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் கனவு இல்லத்தை எளிதாக பெற்றிட பொதுமக்களை பேங்க் ஆஃப் பரோடா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
0Shares