கிராமம் தோறும் புத்தொழில் முதல் கிராம புத்தாக்க குழு

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழக அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) தனது முக்கியத் திட்டமான “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டத்தின் கீழ் முதல் கிராம புத்தாக்க குழுவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு,  அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) தனது முக்கியத் திட்டமான “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் முதல் கிராம புத்தாக்க குழு இன்று நீலகிரி மாவட்டதில் தொடங்கியது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நீலகிரி பழங்குடியினர் பாரம்பரிய மற்றும் கலாச்சார பாதுகாப்பு சொசைட்டி, CSI பொறியியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்னா ஸ்பார்க் தொழில் வளர் காப்பகம் மற்றும் ஹில் ரைஸ் புத்தாக்க மையம் உடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த நஞ்சநாடு புத்தொழில் குழு. கிராமப்புறங்களில் உள்ள இளம் புதுமையாளர்களை முன்னோக்கி கொண்டு சென்று. தொழில் முனைவு சூழலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இத்திட்டம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறப்பு திறனாளிகள் ஆகியோருக்கு புதுமை வளர்ச்சி, யோசனைகளின் வடிவமைப்பு, முன்மாதிரி தயாரிப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆரம்ப கட்ட தொழில் முனைவிற்கு ஆதரவு வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சியை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஸ்டார்டப்TN சார்பாகதிருமதி காயத்ரி மற்றும் ராஜேசேகர், நீலகிரி பழங்குடியினர் பாரம்பரிய மற்றும் கலாச்சார பாதுகாப்பு சொசைட்டி சார்பாக திரு. மணி, சி. எஸ். ஐ கல்லூரி சார்பாக இயக்குனர் முனைவர். பா. டே. அருமைராஜ், ஸ்ரீ ராமகிருஷ்னா ஸ்பார்க் தொழில் வளர் காப்பகம் சார்பாக திரு. திருக்குறள்கனி மற்றும் ஹில் ரைஸ் புத்தாக்க மையம் சார்பாக திரு ஹரிஷ் கலந்து கொண்டனர். “கிராமம் தோறும் புத் தொழில்” 100 கிராமங்களில் 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்என்பது தமிழ்நாடு முழுவதும் 100 கிராமங்களில் 100 புதுமையான ஸ்டார்ட் அப்புகளை உருவாக்கும் StartupTN-ன் முக்கியத் திட்டமாகும். இந்த திட்டம் கிராமப்புறங்களில் கட்டமைப்பு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் வளர்ச்சி ஆதரவுகளை வழங்கி, கிராம நகர இடைவெளியை குறைத்து புதுமை மற்றும் தொழில் முனைவை ஊக்குவிக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் StartupTN-ன் பத்து பிராந்திய மையங்களும், தலா பத்து கிராமங்களில் ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்க பின்வரும் சேவைகளை வழங்கும்: இன்குபேஷன் (தொழில் வளர்ப்பு) ஆதரவு சந்தை சரிபார்ப்பு சட்ட மற்றும் பிராண்டிங் உதவி நிறுவனங்கள் மற்றும் CSR நிறுவனங்களுடன் இணைப்பு முதலியவையாகும்.
ஒவ்வொரு கிராமத்திலும் தேர்வு செய்யப்படும் தகுதியான ஸ்டார்ட்அப்பிற்கு. முன்மாதிரி தயாரிப்பு மற்றும் ஆரம்ப சந்தை அணுகலை விரைவுபடுத்த ரூ.1,00,000- மதிப்பிலான இக்விட்டி இல்லா TANSEED ஆதார நிதி வழங்கப்படும் மாநிலம் முழுவதும் முன்னேற்றத்தை கண்காணிக்கும், சிறந்த நடைமுறைகளை பதிவு செய்யும் மற்றும் விரிவாக்கத்தை ஆதரிக்கும் மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் டாஷ்போர்டும் உருவாக்கப்படவுள்ளது.
முதல் கட்டத்தில், குறைந்தபட்சம் 100 DPIIT அங்கீகரிக்கப்பட்ட கிராம ஸ்டார்ட்அப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உள்ளுார் வேலைவாய்ப்புகள் உருவாகி, அனைவர் உட்புகுத்தலுடனான நிலையான வளர்ச்சி தமிழ்நாடு முழுவதும் மேம்படும்
0Shares