காங்கிரஸ்கட்சி புதியமாவட்டதலைவர் M.இதயத்துல்லா

Loading

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவராக M. இதயத்துல்லா – உளுந்தூர்பேட்டையில் உற்சாக வரவேற்பு
உளுந்தூர்பேட்டை. ஜனவரி 23,
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக  M.இதயத்துல்லா  நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
அவரது பணி சிறக்க வாழ்த்தியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியும் உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் ,நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் வானவேடிக்கை , மேல தாளங்களுடன்  உற்சாகமான வரவேற்பு கொடுத்து வரவேற்பு அளித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின்  திருவுருவ சிலை மாலை அணிவித்து பின்னர் அங்கிருந்து பேருந்து நிலையம் நடந்து சென்று மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கும் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முதல்வர் காமராஜர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் (எஸ்.சி பிரிவு) முனைவர் சீனிவாசன், வரவேற்றார் .
சேவாதளம் மாவட்டத் தலைவர் மீடியா முருகன்,
தொலை தொடர்பு ஆதில்கான்,
 நகரத் தலைவரும் வழக்கறிஞருமான சுரேஷ்குமார்,
 எலவனாசூர்கோட்டை பகுதியின் வட்டாரத் தலைவர்கள் பெரியயசாமி, மற்றும் ஷேக் சவாத்,
ஆதனூர் விஜயகுமார், கலைமணி, மகிளா காங்கிரஸ் அமுதா,  மாவட்ட துணை தலைவர் காளிதாஸ்,
 நகர மன்ற உறுப்பினர் ரஷீத், வண்டிப்பாளையம் ராமச்சந்திரன், பெரியசேவலை முருகன், சேந்தநாடு வட்டாரத் தலைவர் காசிநாதன், ரவிசந்திரன் சங்கராபுரம் வட்டாரத் தலைவர் பிரபு, விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் பிள்ளையார் குப்பம் பழனிவேல், நைனா குப்பம் சாரங்கபாணி, மணலூர்பேட்டை ஆறுமுகம், உளுந்தூர்பேட்டை இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் மூர்த்தி ராமன் அரசூர் சீனிவாசன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று புதிய மாவட்டத் தலைவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
———————
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவராக பெறுப்பேற்ற M. இதயத்துல்லா – உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் ரா‌ஜீ காந்தி திருவுருவ சிலைக்கு கட்சியின் பொறுப்பாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
0Shares