கொசஸ்தலையாற்றின் மேம்பாலபணிகள் துவங்கியது

Loading

திருவள்ளூர் அருகே கொசஸ்தலையாற்றின் மேம்பால பணிகள் தொடங்கிய நிலையில் போதிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி அசம்பாவிதத்தை தவிர்க்க கிராம மக்கள் கோரிக்கை :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமி விலாசபுரம் கிராமத்திலிருந்து மணவூர் சாலையை இணைக்க கொசஸ்தலை ஆற்று பகுதியில் 800 மீட்டர் தூரத்திற்கு புதிய மேம்பாலம் தட்டுவதற்கான பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. எந்த அறிவிப்பு பலகையும் வைக்காமலும் போதிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தாமல் வேலை தொடங்கப்பட்டுள்ளது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்த போது எந்த அதிகாரிகளிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் மேம்பாலத்தை ஒட்டி மேம்பாலத்தை ஒட்டி சர்வீஸ் சாலை பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டில், எந்த திட்டத்தின் அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறுகிறது என்றும் அதற்கான உத்தரவு வழங்கியது யார் என்பது குறித்த எந்த விபரமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணலை எடுத்து சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் திருட்டுத்தனமாக மணல் அள்ளி செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது இந்த கொசஸ்தலை ஆறு வழியாக கால்நடைகளை ஓட்டி செல்லும் போதும், வயதானவர்கள் குழந்தைகள் அவ்வழியாக செல்லும் போது  தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பணிகள் எந்த திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது என்பது குறித்த தெளிவான விளக்கம் யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் கொசஸ்தலையாற்று பகுதியில் இருந்து மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி பணிகள் நடைபெற வேண்டும். மணல் திருட்டு தடுக்க வேண்டும் என்றும் வண்டல் மண் கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நெல்சன் முத்து தெரிவித்தார்.
0Shares