பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு விவசாயஅணி மாநாடு
![]()
பாஜக விவசாயிகள் விழிப்புணர்வு மாநாட்டிற்காக பாராட்டு விழா நடைபெற்றது
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு விவசாய அணி விவசாயிகள் விழிப்புணர்வு மாநாடு வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா காளிங்கராயன் பாளையத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய அணியை சேர்ந்த அனைவரும் வருகை புரிந்து இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பன்னீர்செல்வம்,
பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.செந்தில், விவசாய அணி மாவட்ட தலைவர் சந்திரசேகரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 400-க்கும் மேற்பட்ட விவசாய அணியை சேர்ந்தவருக்கு சைவ அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் பேட்டி அளித்தார்.
தமிழக விவசாய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் அவர்கள் தமிழகத்தில் சுமார் 12 மணி நேரம் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இந்தச் சிறப்பான பயணத்தின் போது விவசாயிகள் சந்திப்பு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடனான கலந்துரையாடல், இயற்கை விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுடனான ஆலோசனைகள் எனப் பலதரப்பட்ட நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
பொங்கல் விழா, பிரம்மாண்ட விவசாயிகள் மாநாடு, கண்காட்சி மற்றும் மத்திய அமைச்சரின் மாட்டு வண்டிப் பயணம் ஆகியவை இந்த நிகழ்விற்கு மேலும் மெருகூட்டின.
குறிப்பாக, விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 25 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள மனுக்களை அமைச்சரிடம் நேரடியாகச் சமர்ப்பித்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, உழவர் உற்பத்திக் குழுக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விவசாயிகளை வெற்றிகரமான வியாபாரிகளாக மாற்றும் நோக்கில், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஒரு புதிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். அதேபோல், ஈரோடு மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று அங்கு மண்டல மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் மிக முக்கிய சிறப்பம்சமாக, எவ்வித அரசியல் தூண்டுதலோ அல்லது பணம், மது, பிரியாணி போன்ற எதிர்பார்ப்புகளோ இன்றி, சுமார் 22,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் லட்சியத்திற்காகத் தாங்களாகவே முன்வந்து திரண்டனர்.
காஞ்சிபுரம் முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களில் வந்து இந்த நிகழ்வை ஒரு மாபெரும் வெற்றியாக மாற்றினர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்து நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் விவசாயப் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன. என்று பேட்டியளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது ஈரோடு தெற்கு மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர்கள் நவநீதகிருஷ்ணன், அம்மன் டெக்ஸ் நமச்சிவாயம் உட்பட ஏராளமானோர் இருந்தனர்.

