செயற்பொறியாளருடன்அனிபால்கென்னடிM.L.Aசந்திப்பு
![]()
புதுச்சேரி ஜன-23
புதுச்சேரி உப்பளம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து செயற்பொறியாளருடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ சந்திப்பு
புதுச்சேரி, உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுப்பணி துறை பணிகள் குறித்து, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் பத்ராவச்சலம் அவர்களை நேரில் சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, புனித சவேரியார் ஆலயம் எதிரே சேதமடைந்துள்ள 20 அடி ஆழத்தில் உள்ள பாதாள வடிகால் குழாய்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், பாதாள வடிகால் கழிவு அலுவலகத்தில் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிணறு இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளதால், அதை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
மேலும், 52 கோடி ரூபாய் செலவில் உப்பளம் தொகுதிக்குட்பட்ட புல்வார் பகுதிகள் முழுவதும் பாதாள வடிகால் சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அந்த பணிகளை தாமதமின்றி விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

