தமிழ்நாடுஅரசின் கிராமம்தோறும்புதுத்தொழில்திட்டம்
![]()
ஈரோடு மாவட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள்
தமிழ்நாடு அரசின் “கிராமம் தோறும் புதுத்தொழில்” திட்டத்தின் கீழ்,
கிராமப்புற தொழில் முனைவோர்களை ஊக்குவித்து, நிலைத்த பொருளாதார
வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தாண்டம்பாளையம், அண்ணாமலை
கோட்டை ஆகிய கிராமங்களை “ஸ்டார்ட்-அப் கிராமங்களாக” அறிவித்துதொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (21.1.2026) அன்று மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு அரசின் “கிராமம்
தோறும் புதுத்தொழில்” திட்டத்தின் கீழ், கிராமப்புற தொழில் முனைவோர்களை
ஊக்குவித்து, நிலைத்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில்
மொடக்குறிச்சி, தாண்டம்பாளையம், சிவகிரி, அண்ணாமலை கோட்டை ஆகிய
கிராமங்களை “ஸ்டார்ட்-அப் கிராமங்களாக” அறிவித்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஸ்டார்ட்-அப் சூழலை மேலும்
வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஸ்பேஸ் டெக் நிதி (ரூ.10 கோடி),
மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான ஸ்டார்ட்-அப் மானிய நிதி, TN
SC/ST ஸ்டார்ட்-அப் நிதி, தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் சீட் நிதி (TANSEED) மற்றும்
தமிழ்நாடு கோ-கிரியேஷன் நிதி (ரூ.100 கோடி) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை
அறிவித்துள்ளார். இந்த தொழில்முனைவு இயக்கத்தை கிராம மட்டத்திற்கு கொண்டு
செல்லும் வகையில், தமிழ்நாடு அரசு “கிராமம் தோறும் புதுத்தொழில்” திட்டத்தை
செயல்படுத்தி வருகிறார்.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை (DPIIT) அங்கீகாரம்
பெற்ற 12,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்புகளுடன், தமிழ்நாடு இந்தியாவின்
முன்னணி ஸ்டார்ட்-அப் மாநிலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. சமீபத்திய
மாநிலங்களின் ஸ்டார்ட்-அப் தரவரிசையில் ‘சிறந்த செயல்திறன் மாநிலம்’ என்ற
விருதையும் பெற்றுள்ளது.
இந்த வளர்ச்சியின் ஒரு முக்கிய அடையாளமாக, ஈரோடு மாவட்டத்தில் DPIIT
அங்கீகாரம் பெற்ற ஸ்டார்ட்-அப்புகளின் எண்ணிக்கை 2020-ல் 21 ஆக இருந்த
நிலையில், 2025-க்குள் 203-ஐ கடந்துள்ளது, இது பத்து மடங்குக்கும் அதிகமான
வளர்ச்சியை கண்டுள்ளது.
கிராமப்புற தொழில்முனைவர்களை ஊக்குவிப்பதோடு, உள்ளூர்
வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிலைத்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்
நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வின் போது, ஸ்டார்ட்-அப் திட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.கோபிநாத், கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு.மு.
வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

