கல்லூரி மாணவர்களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு

Loading

ஈரோடு:
 சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு சி.என்.சி (CNC) கல்லூரியில் மாணவ-மாணவியருக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு வடக்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது தரமான தலைக்கவசம் அணிவது எவ்வாறு உயிரைக் காக்கும் என்பது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. விபத்து நேரங்களில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சண்முகமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன், தலைமை காவலர் சத்யா மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உட்பட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர். மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
0Shares