லோக்ஜனசக்தி &ஜனசக்திமஸ்தூர்சபாஆட்சியரிடம்மனு
![]()
கோவை
கோவை மாவட்டத்தில் லோக் ஜனசக்தி பார்ட்டி, மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா அமைப்பின் சார்பாக, கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை விதிமுறைகளை மீறி கட்டபட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பட்டது.
லோக் ஜன சக்தி கட்சி மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா அமைப்பினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை வழங்கினர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக, லோக் ஜனசக்தி கட்சியின், தேசிய செயலாளர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது.. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, சரவணம்பட்டி சாலையில், கோவை இஎன்டி என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை வளாகத்தில், காது, மூக்கு, தொண்டை ஆகியவை, அறுவை சிகிச்சை செய்யும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவை சரவணம்பட்டியை சேர்ந்த டாக்டர் சஜிப் ரங்கசாமி இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனை முறையான எந்தவித அனுமதியையும், கோவை மாவட்ட நகர் ஊரமைப்பு துறை மற்றும் கோவை மாநகராட்சி இடம் இருந்து பெறவில்லை எனவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும், கடந்த 2011 ஆம் ஆண்டு வரை மட்டுமே பெறப்பட்டுள்ளது எனவும், இந்த மருத்துவமனை மருத்துவம், சாராத பிற பயன்பாட்டுக்கு உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடம் வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனவும், இதன் காரணமாக இந்த சாலையில் தினமும், போக்குவரத்து நெரிசல், மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக இந்த கோவை இஎன்டி மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தார் .

