ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
![]()
ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்: வாசன் கண் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு:
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஈரோடு வாசன் கண் மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் கண் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், ஈரோடு மேற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளருமான துரைசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ, டாக்ஸி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் பங்கேற்று இலவச கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வாசன் கண் மருத்துவமனை விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.சிந்தனை, கண்புரை மற்றும் கண் நீர் அழுத்த நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.மனோரமா S.பஹேதி, கண் பரிசோதனை நிபுணர்கள் டாக்டர்.சரண்யா மற்றும் டாக்டர் ப்ரீத்தி மதுபாலா ஆகியோர் கலந்துகொண்டு ஓட்டுநர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஜனவரி 11 முதல் பிப்ரவரி 11 வரை ஒரு மாத காலத்திற்கு வாசன் கண் மருத்துவமனையில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

