நீலகிரி மாவட்டத்தில் மக்கள்குறைதீர்க்கும் நாள்கூட்டம்

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மதர் சுப்பீரியர் (உதகை நசரத் கான்வென்ட்), கிராண்ட் எண்டர்பிரைசஸ் (குட் ஷெப்பேர்டு பள்ளி), உதகை பர்னில் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோர்களின் தீர்வை விதிக்கப்படாத நிலங்களுக்கு தீர்வை விதிக்கபட்டு (Free Hold Patta) அதற்குண்டான பட்டாக்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் திரு.பழனிச்சாமி (நிலம்), கண்ணன் (கணக்குகள்) உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares