துடியலூரில் MGR-ன் 109 வது பிறந்தநாள் விழா
![]()
கோவை
துடியலூரில் MGR-ன் 109 வது பிறந்தநாள் விழா
PRG அருண்குமார் MLA மலர்கள் தூவி மரியாதை
பொதுமக்களுக்கு கேக் மற்றும் காலை உணவு வழங்கினர்
கோவை துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் துடியலூர் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் கலந்துகொண்டு எம் ஜி ஆரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு கேக் மற்றும் காலை உணவு வழங்கினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம் ஜி ஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழாவை அ தி மு க வினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் துடியலூர் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் எம் ஜி ஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அண்ணா தொழிற்சங்க துடியலூர் பகுதி கழக செயலாளர் வி ஆர் முருகேசன் வரவேற்றார். துடியலூர் பகுதி கழக செயலாளர் வனிதாமணி, ஒண்ணாவது வட்டக் கழக செயலாளர் சாந்திபூசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம் ஜி ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து கட்சி தொண்டர்களிடையே பேசிய பி ஆர் ஜி அருண்குமார் எம் ஜி ஆரின் ஆட்சி முதல் தற்போது வரை அ தி மு க ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும், இன்றளவும் அத்திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், வரும் தேர்தலில் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆவார், அதற்கு அனைத்து கட்சி தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு கேக் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் துரைசாமி, ஐ டி விங் வடக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், 1வது வட்டக் கழக அவை தலைவர் செல்வகுமார், சின்னவேடம்பட்டி பகுதி கழக செயலாளர் மாரிசாமி, இரண்டாவது வட்டக் கழக செயலாளர் ஜெயக்குமார், சின்னவேடம்பட்டி வட்டக் கழக செயலாளர் மாரப்பன், இரண்டாவது வட்ட கழக பொருளாளர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், 15 வது வட்டக் கழக செயலாளர் சுரேஷ்குமார், 14 வது வட்ட கழக செயலாளர் பிரகாஷ், இரண்டாவது வட்டக் கழக செயலாளர் வி என் காளிச்சாமி, துடியலூர் பகுதி கழக அவை தலைவர் ஐ டி ஐ ஜெயராஜ், 15 வது வார்டு இணைச் செயலாளர் அண்ணாமலை, இளம் பெண்கள் பாசறை கௌதம், அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், இரண்டாவது துணைச் செயலாளர் ராஜன், இரண்டாவது வட்டக் கழக உறுப்பினர் ராஜகோபால், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார், பகுதி கழக வர்த்தக அணி செயலாளர் முத்து, 1வது வட்டக் கழக இணை செயலாளர் சுசீலா, 15 வது வட்டக் கழக செயலாளர் சுரேஷ் பாபு, 1 வது வட்டக் கழக முன்னாள் துணைச் செயலாளர் ராஜாத்தி, அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் சின்னசாமி என்கிற பிரபு, சேகர், நாகராஜ், ஆறுச்சாமி, ரவி மற்றும் மருதாசலம், சதீஷ்குமார், ராமசாமி, விஜயா, முருகன், தனா, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் கிளை தலைவர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

