ஸ்ரீகணேஷ்கலை,அறிவியல்கல்லூரியில்பொங்கல்விழா

Loading

ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

“பொங்கல் விழா கொண்டாட்டம்”
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “பொங்கல் விழா” கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு நம் கல்லூரியின் தாளாளர் திரு.மு.தங்கவேல் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் திரு.த.விஜய்கணேஷ், பொருளாளர் திரு.த.செந்தில்குமார் மற்றும் கல்லூரியின் முதல்வர் ஆ.விமலாதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்தும், பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய உணவு தானியமான வரகு. சாமை முதலிய தானியங்கள் மூலம் பொங்கள் வைத்து தமிழர் திருநாளைக் கொண்டாடினர். இவ்விழாவில் மாணவர்களுக்கு உறியடித்தல், கரும்பு உடைத்தல், கயிறு இழுத்தல் மற்றும் கபாடி போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவிகளுக்கு கோலம், மெஹந்தி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ – மாணவிகள் நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இவ்விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ
எனவே இச்செய்தியைத் தாங்கள் தங்களது பத்திரிக்கையில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0Shares